ஆப்நகரம்

PF திட்டத்தில் 14 லட்சம் பேர் இணைப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் பிஎஃப் திட்டத்தில் புதிதாக 14.81 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Oct 2021, 11:24 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பிஎஃப் பணத்தை அதிகமாக எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல, ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் சந்தாதார்கள் பலர் பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறினர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பிஎஃப் திட்டத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2021 தொடக்கம் முதலே பிஎஃப் திட்டத்தில் புதிதாக இணையும் சந்தாதார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
Samayam Tamil epfo


இதுகுறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தம் 14.81 லட்சம் பேர் 2021 ஆகஸ்ட் மாதத்தில் பிஎஃப் திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பிஎஃப் சந்தாதார் இணைப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிய சந்தாதார் இணைப்பில் 12.61 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 14.81 லட்சம் பேரில் சுமார் 9.19 லட்சம் பேர் முதல் முறையாக இதில் இணைகின்றனர்.

Gold rate: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா! மீண்டும் விலை உயர்வு!

அதேநேரம், பிஎஃப் திட்டத்திலிருந்து ஏற்கெனவே வெளியேறிய 5.62 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தங்களை இத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டுள்ளனர். வயது வாரியாகப் பார்த்தால் 22 முதல் 25 வயது உடையவர்கள் சுமார் 4.01 லட்சம் எண்ணிக்கையில் ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து 18 முதல் 21 வயது பிரிவில் 3.25 லட்சம் பேர் தங்களை பிஎஃப் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்