ஆப்நகரம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி!

234 வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.24.85 கோடி நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 6 Aug 2020, 8:10 pm
இந்திய ஸ்டார்ட் அப் துறை கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. அரசு தரப்பிலிருந்து ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் புதிய தொழில் முனைவோருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வங்கிகள் தரப்பிலும் இத்துறைக்கு போதிய கடனுதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil start up


இதன்படி, நடப்பு நிதியாண்டில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் 234 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.24.85 கோடி நிதியுதவி வழங்குவதாக மத்திய வேளாண் அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 6) அறிவித்துள்ளது. ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவியை வழங்குவதன் மூலம் அரசானது புதுமை மற்றும் வேளாண் திறனை ஊக்குவிப்பதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 112 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதியுதவியை அரசு வழங்கியிருந்தது.

இனி வழக்கமான சம்பளம் கிடைக்கும்: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் மொத்தம் 346 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இதுவரையில் மொத்தம் ரூ.36.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 29 வேளாண் மையங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பங்களித்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேளாண் பதப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் வேளாண்மை, பண்ணை இயந்திரமயமாக்கல், கழிவு மேலாண்மை, பால் மற்றும் மீன்வளத் துறையில் செயலாற்றி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்