ஆப்நகரம்

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி சீரழியும் இந்தியா; உண்மையை உடைத்த ரகுராம் ராஜன்!

புதுடெல்லி: இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 16 Dec 2018, 12:20 am
இந்தியாவில் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 13 பொருளாதார வல்லுநர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
Samayam Tamil Raghuram Rajan


இதுகுறித்து பேசிய ராஜன், நமது நாடு 7% வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் அதற்கேற்பு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. உதாரணத்திற்கும், 90,000 ரயில்வே காலிப் பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவை மிகவும் கீழ் நிலை வேலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளைக்கு 250 பேர் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் இந்தியாவில் வேலைக்கான தேவையை உணர்ந்து கொள்ளலாம். நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும், அனைத்து மக்களுக்கு பலனளிக்கவில்லை.

ஏற்றத்தாழ்வு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் நிதிப் பற்றாக்குறையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மாநில அரசுகளின் பட்ஜெட்கள் போதிய நிதியின்றி தவிக்கின்றன. வர்த்தகத்திற்கு தேவையான நிதி எவ்வளவு கடன் வாங்கினாலும் போதவில்லை என்று ராஜன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்