ஆப்நகரம்

பிஎஃப் பணத்தை எடுத்த 3.5 கோடிப் பேர்!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து சுமார் 3.5 கோடிப் பேர் கடந்த ஒரு வருடத்தில் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.

Samayam Tamil 18 May 2021, 9:56 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், அதன் பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது.
Samayam Tamil pf


மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது. அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசிக் கொண்டிருப்பதால் இன்னும் அதிகப் பேர் தங்களது பிஎஃப் சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி, 2020 ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் மொத்தம் 3.5 கோடிப் பேர் தங்களது பிஎஃப் சேமிப்புப் பணத்தை தொகையாக எடுத்துள்ளனர். குறிப்பாக, கொரோனா அட்வான்ஸ் பிரிவின் கீழ் மொத்தம் 72 லட்சம் பேர் 2020 ஏப்ரல் முதல் 2021 மே 12ஆம் தேதி வரையில் எடுத்துள்ளனர். இவர்கள் எடுத்த மொத்தத் தொகை ரூ.18,500 கோடி.

பிஎஃப் திட்டத்தில் இணைந்துள்ள மொத்த சந்தாதார்களில் பாதிக்கு மேலானோர் இந்த ஒரு வருடத்தில் தங்களது பிஎஃப் சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேற்கூறிய காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்ட பிஎஃப் பணம் ரூ.1.25 லட்சம் கோடியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்