ஆப்நகரம்

ஏற்றுமதியை உயர்த்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!

தமிழ்நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 6ஆம் தேதி சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 4 Mar 2023, 7:19 am
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் & சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.
Samayam Tamil export


தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பயிற்சியினை வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவற்றைப் பெறும் முறைகள் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் பின்வருமாறு:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 044-22252081/22252082, 9677152265, 8668102600.

இப்பயிற்சி வகுப்பினைப் பயன்படுத்திக் கொண்டு ஏற்றுமதியாளர்கள் தங்களது தொழிலில் முன்னேற வேண்டும் எனவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்