ஆப்நகரம்

6 மாதத்தில் 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரையில் 31.1 லட்சம் வேலைவாயப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Apr 2018, 10:32 pm
கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரையில் 31.1 லட்சம் வேலைவாயப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil it employees


இபிஎப்ஓ எனப்படும் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் புள்ளி விபரங்களின்படி, கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரையில் 31.1 லட்சம் மக்கள் புதிதாக பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்த 31.1 லட்சம் என்பது கணக்கில் உள்ள விபரங்கள் ஆகும். எனவே சராசரியாக 31.1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆறு மாதத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

மேலும், இனி வருங்கால வைப்பு நிதி ஆணையத்தை மாதாந்திர அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விபரங்களை ஆராய முடியும் என்றும் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்