ஆப்நகரம்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத 4 லட்சம் நிறுவனங்கள்!

இந்திய அளவில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத 4 லட்சம் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

TNN 18 Apr 2017, 2:43 pm
இந்திய அளவில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத 4 லட்சம் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil 4 lakh companies face deregistration for not filing i t returns
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத 4 லட்சம் நிறுவனங்கள்!


கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 2016-17ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை, தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தற்போது தாக்கல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2013-14, 2014-2015 ஆகிய நிதியாண்டுகளில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் விவரம் திரட்டப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 4 லட்சம் நிறுவனங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனங்களுக்கு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய, ஒருமாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறினால், அந்நிறுவனங்களின் பதிவு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிலும் இத்தகைய வரி ஏய்ப்பு தொடரக்கூடாது என்பதற்காகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Business: 4 lakh companies in India face deregistration for not filing I-T returns.

அடுத்த செய்தி

டிரெண்டிங்