ஆப்நகரம்

வங்கிக் கணக்கில் மாயமாகும் 436 ரூபாய்.. இதை செய்தால் நிறுத்தப்படும்!

வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும் 436 ரூபாய். ரத்து செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Feb 2023, 3:57 pm
வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தும், தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் இருந்தும் திடீரென 436 ரூபாய் மாயமாகிவிடுவதாக பலரும் சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த 436 ரூபாய் எங்கே போகிறது, எப்படி ரத்து செய்வது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
Samayam Tamil 436 rupees deducted from your bank savings account then do this to stop the deduction
வங்கிக் கணக்கில் மாயமாகும் 436 ரூபாய்.. இதை செய்தால் நிறுத்தப்படும்!


இன்சூரன்ஸ் திட்டங்கள்

பொதுமக்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 2015ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஜீவ ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) ஆகிய இரண்டு திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.

தகுதி

18 வயது முதல் 50 வயது வரையிலான, வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

காப்பீடு

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த மே 31ஆம் தேதி வரை 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதாவது, பயனாளி இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

பிரீமியம்

இத்திட்டத்தின் பயனாளிகள் ஆண்டுக்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். பயனாளரின் வங்கிக் கணக்கில் இருந்தே இந்த 436 ரூபாய் நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்காகத்தான் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 436 ரூபாய் பிரீமியம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ரத்து செய்வது எப்படி?

உங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டங்களில் பயன்பெற வேண்டாம் என்றாலோ, 436 ரூபாயை வங்கி கணக்கில் இருந்து எடுக்கக்கூடாது என்றாலோ நீங்கள் வங்கிக் கிளைக்கு சென்று கோரிக்கை விடுத்தால் ரத்து செய்யப்பட்டுவிடும். அதன் பின் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 436 ரூபாய் எடுக்கப்படாது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்