ஆப்நகரம்

சிறப்பு ரயில்கள் தொடக்கம்: ரூ.16 கோடி வசூல்!

பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு வாயிலாக ரூ.16.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Samayam Tamil 12 May 2020, 3:07 pm
கொரோனா பீதியால் மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கின. பின்னர் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஷ்ராமிக் ஸ்பெஷல் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது. அதைத் தொடர்ந்து பயணிகளுக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (மே 11) மாலை 6 மணிக்குத் தொடங்கியது. இன்று (மே 12) முதல் இந்த ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil irctc


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் மொத்தம் 45,533 முன்பதிவுகள் வந்துள்ளன. இதன் மூலம் இந்திய ரயில்வே துறைக்கு ரூ.16.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான இந்த முன்பதிவில் மொத்தம் 82,317 பேர் பயணிக்கவிருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில், ரயில் புறப்படுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் எனவும், உணவு உள்ளிட்டவற்றை பயணிகளே எடுத்துவரவேண்டும் எனவும் ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை... ஐடி நிறுவனத்துக்கு எச்சரிக்கை!

இந்த 15 சிறப்பு ரயில்களும் ஏசி வசதி கொண்டவையாகும். இவற்றின் கட்டணம் அதிவேக ரயிலுக்கு சமமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்து இ-டிக்கெட் உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டுமே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

விசா கெடுபிடி: அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்கள்!

ஷ்ராமிக் ரயில்களைப் பொறுத்தவரையில், இன்று (மே 12) வரையில்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 524 ஷ்ராமிக்ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.அவற்றில் 448 ரயில்கள் சேருமிடங்களை அடைந்துவிட்டன. மேலும் 94 ரயில்கள் பயண வழியில் இருக்கின்றன. இந்த ஷ்ராமிக் ரயில்களில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாகமுறையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பயணத்தின் போது இலவச உணவும், தண்ணீரும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்