ஆப்நகரம்

எல்லாருக்கும் சம்பளம், PF, Gratuity மாறப்போகுது!!

புதிய ஊதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம், PF, Gratuity ஆகியவை மாறிவிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்...

Samayam Tamil 23 Feb 2021, 11:08 am
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஊதிய சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் (basic salary) குறைந்ததது 50 விழுக்காடாவது ஒட்டுமொத்த சம்பளத்தில் (net CTC) வந்துவிடும்.
Samayam Tamil cash


எனவே, புதிய ஊதிய சட்டத்தால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பயணப் படி, வீட்டு வாடகை படி ஆகியவை பெரியளவில் அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாருக்கும் பணம் வரும்.. இதை மட்டும் செஞ்சிடுங்க!
அரசு ஊழியர்களின் படித்தொகையும் பாதிக்கப்படும் என தெரிகிறது. புதிய ஊதிய சட்டத்தின்படி, ஒரு அரசு ஊழியரின் ஒட்டுமொத்த சம்பளத்தில் படித்தொகை 50 விழுக்காடுக்கு மேல் இருக்கக்கூடாது என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

PF, Gratuity ஆகியவற்றையும் புதிய ஊதிய சட்டம் பாதிக்குமா? புதிய ஊதிய சட்டம் அமலுக்கு வந்தபிறகு PF, Gratuity ஆகியவையும் மாற்றமடையும் என்கின்றனர் முதலீட்டு வல்லுநர்கள்.

ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல காலம் பொறந்தாச்சு!
ஏனெனில், மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை வைத்துதான் PF, Gratuity கணக்கிடப்படுகிறது. புதிய ஊதிய சட்டத்தால் அடிப்படை ஊதியமும், அகவிலைப்படியும் மாறிவிடும். எனவே, PF, Gratuity ஆகியவையும் மாறிவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்