ஆப்நகரம்

வீட்டுக்கே வரும் ஆதார் சேவை.. இனி நீங்கள் அலைய வேண்டியதே இல்லை!

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 26 Nov 2022, 3:26 pm
உங்களுடைய ஆதார் கார்டில் உள்ள திருத்தங்களை இனி வீட்டு வாசலியே நீங்கள் செய்யலாம். புதிய வசதி அறிமுகம்.
Samayam Tamil aadhaar card holders jumped with joy after hearing this news door step service started
வீட்டுக்கே வரும் ஆதார் சேவை.. இனி நீங்கள் அலைய வேண்டியதே இல்லை!


​ஆதார் கார்டு!

ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு அவசியம். ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை வந்துவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் இணைக்கப்பட்டு தனிநபர் தகவல் கொண்ட மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.

​அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றே அப்டேட் செய்ய முடியும். அங்கு சில நேரம் மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமமும் இருக்கும். ஆனால், ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யும் வசதி வந்த பிறகு பயனாளிகள் தாங்களாவே வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் புகைப்படம் சில விஷயங்களை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும்.

​வீடு தேடி வரும் சேவை!

ஆதார் கார்டுதாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்க புதிய வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) கொண்டுவந்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொலைபேசி எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றலாம். இதனால் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

​இந்தியா போஸ்ட்!

ஆதார் அப்டேட்டை எளிதாக மேற்கொள்ள ’இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ வங்கியில் பணிபுரியும் சுமார் தபால்காரர்களுக்கு ஆதார் அமைப்பு பயிற்சி அளிக்கிறது. இந்த தபால்காரர்கள் பயனாளிகளின் வீட்டு வாசலில் ஆதார் புதுப்பிப்பு சேவைகளை வழங்குவார்கள். மொத்தம் 1.5 லட்சம் தபால்காரர்கள் இரண்டு தனித்தனி கட்டங்களில் பயிற்சி பெறுகிறார்கள். ஆதார் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத தனிநபர்களுக்கான புதிய ஆதார் அட்டைகளை உருவாக்கவும் தபால்காரர்கள் உதவி செய்வார்கள்.

​சிறப்பு வசதி!

வீட்டிற்கே வந்து சேவை வழங்குவதற்காக தபால்காரர்களுக்கு டிஜிட்டல் கேட்ஜெட், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய ஆதார் கிட் வழங்கப்படும். அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிப்பதற்கு தபால்காரர்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம். தபால்காரர்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகளையும் உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் அனைவராலும் ஆன்லைன் மூலமாக ஆதார் அப்டேட் செய்துவிட முடியாது. வயதானர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் போன்றோருக்கு இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்