ஆப்நகரம்

ஆதார் விவரங்களை லீக் செய்யலாமா?

நம்முடைய ஆதார் விவரங்களை ஆதார் அமைப்பு கசியவிடுமா என்பதற்கான விளக்கம் இதோ..

Samayam Tamil 5 May 2022, 5:11 pm
ஆதார் கார்டு என்பத் தனிமனிதனின் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் ஒருவருடைய இறப்புச் சான்றிதழ் வரை மிக முக்கியமானதாக உள்ளது. ஆதார் இல்லாமல் தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலை வந்திவிடும்போல! அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil aadhaar


இந்த ஆதார் கார்டை வைத்து கடன் வாங்க முடியும். இதனால்தான் நிறையப் பேரின் ஆதார் விவரங்கள் திருடப்பட்டு மோசடி செய்யப்படுகிறது. ஒருவருடைய ஆதார் கார்டை அவருக்கே தெரியாமல் வேறொருவர் பயன்படுத்தி மோசடி செய்கிறார். இதுபோன்ற மோசடிகளில் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. இதனால்தான் ஆதார் விவரங்களை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

நம்முடைய ஆதார் தொடர்பான விவரங்களை ஆதார் அமைப்பு நிர்வகிக்கிறது. அந்த ஆதார் அமைப்பு நம்முடைய தனிநபர் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துமா என்ற சந்தேகம் இருக்கலாம். இதுகுறித்து ஆதார் அமைப்பே விளக்கம் கொடுத்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்றில், தனிநபரின் ஆதார் விவரங்களை வேறு யாருக்கும் கொடுப்பதில்லை எனவும், பாத்திரமாகவே வைக்கப்படும் எனவும் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல, தனிநபரின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரித்து வைப்பதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் குற்றவாளியின் கைரேகையை அவரது ஆதார் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ஆதார் அமைப்பு இந்த விளக்கத்தை தற்போது கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்