ஆப்நகரம்

ஆதார் - பிஎஃப் இணைப்பு... கால அவகாசம் நீட்டிப்பு!

டிசம்பர் 31ஆம் தேதி வரை பிஎஃப் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Sep 2021, 5:38 pm
தனி மனித அடையாள ஆவணமான ஆதார் கார்டு படிப்படியாக அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. ஆதார் உள்ள அனைவரும் தங்களது பான் கார்டு மற்றும் பிஎஃப் கணக்கு ஆகியவற்றில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
Samayam Tamil pf aadhaar


கடைசியாக மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஆதாரை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் இணைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்னும் பலர் ஆதாருடன் பிஎஃப் கணக்கை இணைக்காமல் உள்ளதுபோல் தெரிகிறது. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகள் இருப்பதால்தான் இதற்கு முன்னர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் மொபைல் நம்பர் மாத்தணுமா? ஈசி வழி!
ஆனால் இச்சலுகை அனைவருக்கும் கிடையாது. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் உள்ள 7 மாநிலங்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது. ஆதாரை பிஎஃப் கணக்குடன் இணைத்தால்தான் பிஎஃப் பணத்தை எடுப்பது போன்ற சேவைகளில் பிரச்சினை இருக்காது. இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் இதில் சிக்கல்களைச் சந்திக்கநேரிடும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எச்சரித்துள்ளது.

பிஎஃப் கணக்குடன் ஆதாரை இணைப்பது ஈசிதான். www.epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று Online Services என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் e-KYC Portal என்ற வசதியில் link UAN aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

UAN நம்பரையும் மொபைல் நம்பரையும் பதிவிட வேண்டும். உடனடியாக உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு, பின்னர் ஆதார் நம்பரையும் பதிவிட வேண்டும்.

அடுத்ததாக proceed கொடுத்தால் மீண்டும் ஆதாருக்கான ஓடிபி சரிபார்ப்பு முடித்துவிட்டால் ஆதாருடன் பிஎஃப் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்