ஆப்நகரம்

கடவுளின் செயலும், பக்கத்து வீட்டு ஆண்ட்டி நிர்மலா சீதாராமனும்!

பொருளாதார வீழ்ச்சியை கடவுளின் செயல் என்று தான் கூறியதை ஏன் அனைவரும் கேளி செய்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 19 Sep 2020, 5:13 pm
நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அதில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இது எதிர்க்கட்சியினர் தரப்பிலும் நாட்டு மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் விமர்சனங்கள் பறந்தன.
Samayam Tamil nirmala


கொரோனா பாதிப்பால்தான் இந்தியப் பொருளாதாரம் இந்த இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், இதுபோல திடீரென்று ஏற்படும் பாதிப்புகள் 'கடவுளின் செயல்' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். இவ்வாறு இந்தியப் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், #ResignNirmala என்ற கேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். பொருளாதார வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்காமல் கடவுளைக் காரணம் கூறுவதா என்று பல்வேறு தரப்பில் கொதித்தெழுந்தனர்.

100 நாள் வேலைத் திட்டம்: 86 லட்சம் பேருக்கு வேலை அட்டை!

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகக் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலானோர் இதுபோன்ற இக்கட்டான சமயங்களை ‘Force majeure' என்று கூறினால் அதை ஏற்கின்றனர்; ஆனால் ’Act of God' என்று நான் கூறியதை ஏற்காமல் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்று கவலை தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

வேலை தேடுவோருக்கு சூப்பர் சான்ஸ் - மிஸ் பண்ணிடாதிங்க!

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நான் ஒரு சாதாரண பெண் நிதியமைச்சர் என்பதால்தான் என் பேச்சு எடுபடவில்லை. ஏதோ பக்கத்து வீட்டு ஆண்ட்டி இவ்வாறு கூறுவதைப் போல நினைத்து என் வார்த்தைகளை உதாசீனப்படுத்துகின்றனர்” எனவும் நிர்மலா சீதாராமன் வருத்தம் தெரிவித்துள்ளார். ”உங்களது பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை நான் ஏற்பேன். ஆனால் கேளி - கிண்டல்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்