ஆப்நகரம்

Adani: வங்கிகளிடம் 6071 கோடி ரூபாய் கடன் வாங்கிய அதானி.. காரணம் இதுதான்!

கட்ச் காப்பர் சுத்திகரிப்பு ஆலைக்காக 6071 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது அதானி நிறுவனம்.

Samayam Tamil 27 Jun 2022, 12:23 pm
அதானி நிறுவனத்துக்கு சொந்தமான கட்ச் காப்பர் (Kutch Copper) நிறுவனம் மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கவுள்ளது. இந்த ஆலையில் இரண்டு கட்டமாக ஆண்டுக்கு 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil adani


இதில் முதற்கட்ட 5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்திக்காக எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் 6071 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது அதானி நிறுவனம். இதன்படி குஜராத் மாநில முந்த்ராவில் கட்ச் காப்பர் நிறுவனத்தின் ஆலை அமையவிருக்கிறது.

இதற்காக எஸ்பிஐ, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, எக்ஸிம் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகளிடம் 6071 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது அதானி நிறுவனம்.

IKEA: திருப்பதி தரிசனமும் இல்லை.. எம்.எல்.ஏக்கள் கூட்டமும் இல்லை.. ஸ்தம்பித்த ஐகியா ஸ்டோர்!
கட்ச் காப்பர் நிறுவனத்தின் முதற்கட்ட பணிகளுக்காக 6071 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குநர் வினய் பிரகாஷ், “ஆலைக்கு தேவையான தொழில்நுட்பம் தயார் நிலையில் உள்ளது.

ஆலை கட்டுமான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் ஆலையில் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலைகளில் கட்ச் காப்பர் ஆலையும் ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்