ஆப்நகரம்

ஒரே நாளில் ரூ.97000 கோடி காலி.. ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்!

நேற்று ஒரே நாளில் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 97000 கோடி ரூபாய் சரிந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Jan 2023, 1:22 pm
கடந்த சில ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் பங்கு விலை பயங்கரமாக உயர்ந்துள்ளது. இதனால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், அதானி பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
Samayam Tamil adani
adani


இந்நிலையில், அதானி நிறுவனங்களின் பங்குகள் கையாளப்பட்டிருப்பதாகவும், கணக்கு மோசடிகளில் அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் (Hindenburg Research) நிறுவனம் ஆய்வு ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ரிப்போர்ட்டில் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, நேற்று பங்கு வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. நேற்று (ஜனவரி 25) ஒரே நாளில் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 96,672 கோடி ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பேராசை பெருநஷ்டம்.. F&O வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் சிறு வர்த்தகர்கள்.. செபி அதிரடி முடிவு!
முந்தைய தினமான ஜனவரி 24ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் வெளியானதை தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 18.23 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.

ஹிண்டென்பர்க் நிறுவனம் எந்தவொரு தகவலையும் சரிபார்க்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல்களையும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் இணைத்து தவறான நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை எனவும் அதானி குழுமத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று பங்கு வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 1.54% சரிந்துவிட்டது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி வில்மர் ஆகிய பங்குகள் 5% தொடங்கி 9% வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

இதுபோக அதானி குழுமம் அண்மையில் விலைக்கு வாங்கிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், என்டிடிவி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் முறையே 7.26%, 7.71%, 4.98% சரிந்துள்ளன.

அதானி குழுமம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை FPO வாயிலாக விற்பனை செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த சூழலில் ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் வெளியாகி அதானி பங்குகளை நாசம் செய்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்