ஆப்நகரம்

இந்தியாவுக்கு உலக வளர்ச்சி வங்கி 1.5 பில்லியன் டாலர் கடனுதவி!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 28 Apr 2020, 5:56 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு உலக வளர்ச்சி வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil உலக வளர்ச்சி வங்கி


இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க, நோயைக் கட்டுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். அதேசமயம், ஏழைகளுக்கு உதவுவதற்கு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இந்த நிதி பயன்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்த வங்கியின் தலைவர் மாசட்சுகு அசாகாவா அளித்து இருக்கும் பேட்டியில், ''அரசு மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு இந்தப் பணம் விரைவில் வழங்கப்படும்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் அனைத்து செயல்களுக்கும் உலக வளர்ச்சி வங்கி துணை நிற்கும். குறிப்பாக ஏழைகள், மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவுவோம்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மீது விசாரணை தேவையா? சு.வெங்கடேசன் நிர்மலாவுக்குக் கடிதம்!

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. துவக்கத்திலேயே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது'' என்றார்.

மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, கேர்ஸ் என்ற பெயரில் இந்த கடனுதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் 800 மில்லியன் மக்களுக்கு அதாவது, வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், விவசாயிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், கட்டிட தொழிலாளர்கள் என்று சமுதாயத்தில் பொருளாதார மற்றும் சுகாதார சிக்கலுக்கு உள்ளாகும் மக்களுக்கு உதவுவதற்கு இந்த கடனுதவி அளிக்கப்படுகிறது.

சம்பளக் குறைப்பை அறிவித்த பெல் நிறுவனம்: கொரோனா படுத்தும் பாடு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு உதவுவதற்கு என்று COVID-19 pandemic response option (CPRO) என்ற அமைப்பு உலக வளர்ச்சி வங்கியின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் இருந்து கேர்ஸ் என்ற திட்டத்திற்கு நிதி அனுப்பப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு கொரோனாவை எதிர்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த அமைப்பில் 20 பில்லியன் டாலர் நிதியும் உருவாக்கப்பட்டது.

ராணுவச் செலவுகள்: இந்தியா முன்னேற்றம்!

எதிர்காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு, அரசின் திட்டங்களை கண்காணிக்க, மதிப்பீடு செய்ய சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க உதவி செய்வோம் என்று உலக வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்