ஆப்நகரம்

நகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை வீடு... அரசு உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வாடகை வீடுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2020, 2:38 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்திருந்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரச் சலுகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நகப்புற ஏழை மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் வாடகை வீடுகள் ஏற்பாடு செய்து தரப்படும். அரசு - பொதுமக்கள் பங்களிப்பில் நகரப்புறங்களில் மலிவு வாடகை கொண்ட வீடுகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறப்பட்டது.
Samayam Tamil house


இத்திட்டத்துக்காக குறைந்த வாடகை கொண்ட வீடுகள் அடங்கிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கித் தருவதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து சலுகை வழங்கப்படுகிறது. இவ்வகை வீடுகளை அமைக்கவும், அவற்றைக் கையாளவும் மத்திய மாநில அமைப்புகளுக்கு சலுகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளுக்கு கொரோனா இன்ஸ்யூரன்ஸ்!

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு நிதியின் கீழ் உருவாக்கப்பட்டு காலியாக உள்ள வீட்டு வசதி வளாகங்களும் பொருளாதார ரீதியாக அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மலிவு வாடகை வீட்டு வளாகங்களாக மாற்றி அமைக்கப்படும். இத்திட்டமானது காலியாக உள்ள தங்களது சொந்த இடத்திலும் இதுபோன்ற மலிவு வாடகை வீட்டு வளாகங்களை உருவாக்க தனிநபர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதோடு வாடகை வீட்டுத் துறையில் புதிய தொழில்முனைவோரை வளர்க்கவும் உதவி செய்யும். இந்தத் திட்டங்களின் கீழ் செய்யப்படும் முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வீட்டு வளாகங்கள் தேவையற்ற பயணம், மக்கள் நெருக்கடி, மாசு ஆகியவற்றைக் குறைக்கவும் உதவும்” என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் பணத்தை வைத்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி?

இத்திட்டத்தின் கீழ், தங்களிடம் உள்ள காலி நிலத்தில் மலிவு வாடகை கொண்ட வீட்டு வளாகங்களை தாங்களாகவே கட்டி முடித்து 25 ஆண்டுகளுக்குப் பராமரிக்க முன்வரும் தனியார் மற்றும் பொது அமைப்புகளுக்கு நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, 50 சதவீதம் கூடுதலான கட்டுமான அனுமதி, முன்னுரிமைத் துறையில் வழங்கப்படும் வட்டி விகித அடிப்படையில் சலுகைக் கடன், மலிவான வீட்டு வசதித் திட்டங்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான வரிச் சலுகை ஆகியவை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்