ஆப்நகரம்

வேலையை காட்டிய தங்கம்.. மீண்டும் விலை உயர்வு!

காலையில் தங்கம் விலை குறைக்கப்பட்ட நிலையில் மாலையில் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2022, 5:21 pm
தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் இன்று காலையில் தங்கம் விலை 500 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் மாலை நேரத்தில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil gold rate now


சென்னையில் இன்று காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574 ஆக இருந்தது. மாலையில் அது 4,578 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, இன்று காலை 36,592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 32 ரூபாய் உயர்ந்து 36,624 ரூபாய்க்கு வந்துள்ளது.

இன்னைக்கே நகை வாங்கலாம்! வேற லெவல் விலை குறைப்பு!

தூய தங்கத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 4,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,944 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, காலையில் 39,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 32 ரூபாய் உயர்ந்து 39,552 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.67.70 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.67.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்