ஆப்நகரம்

ஜிஎஸ்டிக்குப் பிறகு ஹோட்டல்களில் நடக்கும் மோசடி; உஷார் மக்களே

நாடு முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி யை மத்திய அரசு அறிவித்ததற்குப் பிறகு எந்தந்த பொருட்களில் என்னென்ன விலை மாற்றம் என்று அனைவரும் புலம்பி வருகின்றனர்.

TNN 28 Sep 2017, 5:45 pm
நாடு முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி யை மத்திய அரசு அறிவித்ததற்குப் பிறகு எந்தந்த பொருட்களில் என்னென்ன விலை மாற்றம் என்று அனைவரும் புலம்பி வருகின்றனர்.
Samayam Tamil after gst the hotel fraud selling released
ஜிஎஸ்டிக்குப் பிறகு ஹோட்டல்களில் நடக்கும் மோசடி; உஷார் மக்களே

சில தொழில் நிறுவனங்கள் தங்களது கிரிமினல் மூளையைக் கொண்டு ஜிஎஸ்டி யை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை இரையாக்குகிறது. அதில், மக்களிடம் நேரடியாக கொள்ளையடிப்பது ஹோட்டல்கள் தான்.

ஜிஎஸ்டிக்கு பின், பல ஹோட்டல்களில் நாம் வழக்கம் போல், மொத்த பில்லை மட்டும் பார்த்துக் கொண்டு பணம் செலுத்தி வருகிறோம். அதில் நடக்கும் மோசடிகளை பெரும்பாலான மக்கள் கவனிப்பதில்லை.

புனே நகரில் ஜகதீஷ் என்பவர், ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, வழக்கத்து மாறாக பில்லை கவனித்துள்ளார். அதில் அந்த ஹோட்டல் ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யாமலே ஜிஎஸ்டி வரி வசூலித்து வருவதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் இது போன்ற மோசடி கும்பலைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

after gst the hotel fraud selling released

அடுத்த செய்தி

டிரெண்டிங்