ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது?

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 15 Mar 2022, 12:53 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சமீபத்தில்தான் 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது 50 லட்சம் அரசு ஊழியர்களையும், 65 லட்சம் பென்சனர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரட்டை மகிழ்ச்சி தரும் விதமாக, அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வைக்க்ப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil DA hike


அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு மாநில அரசுகளும் அடுத்தடுத்து சம்பள உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் ஆந்திர பிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதும் உயர்த்தப்பட்டது. அந்த மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 23.29 சதவீதமும், ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 60லிருந்து 62 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கான இந்த ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பால அம்மாநில அரசுக்கு ரூ.10,247 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பளம், ஓய்வு பெறும் வயது மட்டுமல்லாமல், காப்பீடு, பிஎஃப், விடுமுறைச் சலுகை போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.

அகவிலைப்படி நிலுவைத் தொகை செட்டில்மெண்ட்.. அரசு எடுக்கும் முக்கிய முடிவு!!
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த மாதமே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஹோலி பண்டிகையை ஒட்டி, ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அடுத்தடுத்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும்.

கொரோனா பிரச்சினைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக நிறைய சலுகைகள் கிடைக்காமல் தவித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் அடுத்தடுத்து நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்