ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அடுத்தடுத்து வரும் சர்பிரைஸ்!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்துவதாக ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 12:38 pm
கொரோனா பிரச்சினையால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு, அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. சென்ற ஆண்டில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரு மடங்கு உயர்ந்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil DA hike


மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். இதற்கு முன்னர் 31 சதவீதமாக இருந்தது.

அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான சம்பளமும் பெரிய அளவில் உயரவிருக்கிறது. அதாவது, ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் மாதத்துக்கு 18,000 ரூபாய் எனில், இந்த உயர்வுக்குப் பிறகு அகவிலைப்படியாக ரூ.6,120 கிடைக்கும்.

அகவிலைப்படி மீண்டும் உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அதாவது இதற்கு முன்னர் கிடைத்ததை விட 540 ரூபாய் அதிகம். இதேபோல, அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து அகவிலைப்படி உயர்வுடன் மொத்த சம்பளம் கணிசமாக அதிகரிக்கும்.

ஜார்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்