ஆப்நகரம்

ஊதியம் இல்லா விடுப்பு... காண்டான ஏர் இந்தியா ஊழியர்கள்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊதியம் தொடர்பான நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதென்று ஊழியர்கள் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது.

Samayam Tamil 20 Jul 2020, 7:49 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் சுமையைக் குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது. ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது. இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தனது ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப முடிவு செய்தது.
Samayam Tamil air india


ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விரைவில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதால் எதிர்காலமே கேள்விக்குறியான ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்புவதற்கான அதிகாரம் ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் வீட்டுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

எங்களுக்கு வேற வழி தெரியல... ஊழியர்களை வெளியேற்றும் இண்டிகோ!

இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த கட்டாய விடுப்பு குறித்த அதன் ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று ஏர் இந்தியா ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை மேலாண்மை இயக்குநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ஊதியம் இல்லாமல் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கும் திட்டம் குறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், இது கடுமையான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர். ஊதிய ஒப்பந்தத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை இருப்பதால் இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5,000 பேருக்கு வேலை கொடுக்கும் உணவுப் பூங்கா!

ஊழியர்கள் சங்கத்துடன் இதுகுறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில், அதை ஏர் இந்தியா ஊழியர் சங்கம் மறுத்துள்ளது. ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்பட்டால் அதன் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பணி உறுதி வழங்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால் இப்போது அதற்கு முன்னரே அதன் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக ஏர் இந்தியா ஊழியர்கள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்