ஆப்நகரம்

புதிய வழித்தடங்களில் ஏர்இந்தியா விமானம் இயக்கம்!

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் 5 புதிய வழித்தடங்களில் விமான சேவையை துவங்க உள்ளது.

Samayam Tamil 8 Oct 2018, 9:21 am
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 15ம் தேதி கொல்கத்தா- பாங்காங், கொல்கத்தா- ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
Samayam Tamil 2


16ம் தேதி பெங்களுரு- லண்டன், மும்பையிலிருந்தும் விமான சேவை துவங்கப்படவுள்ளது. 28ம் தேதி முதல் மும்பை- நியூயார்க் இடையே ஆறு நாள் விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 120 விமானங்கள் உள்ளன. அதில் 73 சிறிய விமானங்களும், 41 பெரிய விமானங்களும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஆறு ஏ.320 நியோஸ் வகை விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்