ஆப்நகரம்

ரூ. 1,399க்கு வெளிநாட்டு பயணம்.... அசத்தும் ஏர் ஏசியா அதிரடி சலுகை!

ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்ல, அதிரடி சலுகை விலையில் ஏர் ஏசியா நிறுவனம் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Sep 2018, 5:56 pm
சென்னை: ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்ல, அதிரடி சலுகை விலையில் ஏர் ஏசியா நிறுவனம் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil 5


விமான பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, சலுகை விலையில் டிக்கெட்களை நிறுவனங்கள் போட்டி போட்டி அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஏர் ஏரியா நிறுவனம், ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்ல, அதிரடி சலுகை விலையில் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயணிப்பது எப்போது.....
இதன் படி வரும் பிப்ரவரி 19, 2019 முதல் நவம்பர் 26,2019 வரையிலான தேதிகளில் உள்ளூரில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 999 நிர்ணயித்துள்ளது. அதே போல ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 1399 நிர்ணயித்துள்ளது.

குறிப்பிட்ட விமானங்கள்
இது ஏர் ஏசியா நிறுவனத்தின் ஏர் ஏசியா இந்தியா (பிளைட் கோட் -ஐ5), ஏர் ஏசியா பெர்ஹாத் (பிளைட் கோட் -ஏ.கே), தாய் ஏர் ஏசியா (பிளைட் கோட் -எப்.டி.,), ஏர் ஏசியா எக்ஸ் (பிளைட் கோட் -டி7) உள்ளிட்ட விமானங்களில் பயணிக்க இந்த சலுகை கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 உள்நாட்டு இடங்கள்:
உள்நாட்டில் பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுஹாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோரா, ராஞ்சி, புவனேஷ்வர், நாக்பூர், இந்தூர், சூரத், அமிர்தசர், சென்னை என 21 இடங்களுக்கு இந்த சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

வெளிநாட்டு பயணம்...
உள்நாட்டில் கோலாலம்பூர், பாங் காக், கிராபி, சிட்னி, ஆக்லாந்து, மெல்போர்ன், சிங்கப்பூர், பாலே உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இந்த சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தவிர, ஏர் ஏசியா பிக் மெம்பர்களுக்கு கூடுதல் சலுகையும் உள்ளதாகவும் ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்