ஆப்நகரம்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!

கேஒய்சி விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 10:38 pm
தொழில்நுட்ப அம்சங்கள் அதிகரித்து வருவதைப் போலவே அதன் வாயிலாக மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடிகள் ஒருபுறம் இருக்க, மொபைல் நெட்வொர்க் வாயிலான மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தினமும் ஏதேனும் தேவையற்ற அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வங்கியிலிருந்தும் நெட்வொர்க் நிறுவனத்திலிருந்தும் அழைப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களைத் திருடுகின்றனர்.
Samayam Tamil airtel


இந்த விஷயத்தில் ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. நிறுவனம் சார்பாக எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்பு மூலமாக கேஒய்சி விவரங்களைக் கேட்பதில்லை எனவும், யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. கஸ்டமர் கேர் அலுவலகம் அல்லது சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே வாடிக்கையாளரின் தனிநபர் விவரங்கள் பொதுவாகக் கேட்கப்படுகிறது.

ஏடிஎம் கார்டு இருந்தா 10 லட்சம் கிடைக்கும்!
வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பரைத் தவறாகப் பயன்படுத்தி ஓடிபி நம்பரைத் திருடி அதன் மூலமாகப் பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே ஓடிபி போன்ற விவரங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று ஏர்டெல் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்