ஆப்நகரம்

அட்சய திரிதியை: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு!

இந்தியன் பேங்க் உதவி!

Samayam Tamil 2 May 2022, 10:07 am
தங்கம் வாங்க இந்தியன் பேங்க் சிறப்புச் சலுகையின் கீழ் கடன் வழங்குகிறது.
Samayam Tamil akshaya tritiya gold indian bank customers can get personal loan
அட்சய திரிதியை: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு!


அட்சய திரிதியை!

2022ஆம் ஆண்டுக்கான அட்சய திரிதியை வந்துவிட்டது. இந்த நாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் நல்லது என்பார்கள். அதை வாங்க நிறையப் பேர் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால் நிறையப் பேரிடம் கைவசம் பணம் இருக்காது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் என்ன செய்வீர்கள்? அதற்கு உதவுவதற்காகவே இந்தியன் பேங்க் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

சிறப்பு திட்டம்!

'wave' என்ற பெயரில் இந்தியன் பேங்க் தற்போது அறிவித்துள்ள சிறப்புத் திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்குவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. இதில் வாங்கும் கடனுக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இச்சலுகையைப் பயன்படுத்தி கடன் வாங்கலாம். ஆனால், அவர்களது சம்பளம் அல்லது பென்சன் தொகை சம்பளக் கணக்கில் வருவதாக இருக்க வேண்டும். மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலமாகவே இந்தக் கடனை வாங்க முடியும். வங்கிக் கிளைக்கு அலையத் தேவையில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்