ஆப்நகரம்

பென்சன் வாங்குவோருக்கு அலர்ட்.. இதை முடிச்சிட்டிங்களா?

டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழை மொபைலிலேயே சமர்ப்பிப்பது எப்படி?

Samayam Tamil 14 Dec 2021, 6:37 pm
பென்சன் வாங்கும் நபர்கள் அனைவரும் தொடர்ந்து பென்சன் பெற வேண்டுமெனில் வாழ்வுச் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வுச் சான்றிதழ் என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கு சான்றாகும்.
Samayam Tamil pension


ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்றிதழை நவம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். எனினும், இந்த ஆண்டு வாழ்வுச் சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி (LIC) பென்சன் வாங்கும் நபர்கள் ஆன்லைனிலேயே வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எல்ஐசி பென்சன் வாங்கு நபர்கள் ஈசியாக மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்தே டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே தாக்கல் செய்துவிடலாம்.

ரிட்டயர்மெண்டுக்கு பின் சூப்பர் வருமானம்.. இப்படியும் ஒரு பிளான் இருக்கு!
இதற்காக எல்ஐசி நிறுவனம் LIC Jeevan Saakshya என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த ஆப்பை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ளவும்.

* ஆப் திறந்தபின் அதில் உங்களது பாலிசி விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

* பின்னர் உங்களது செல்ஃபி படத்தை எடுக்க வேண்டும். இது உங்கள் டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழில் பயன்படுத்தப்படும்.

* இதன்பின் உங்கள் ஆதார் வெரிஃபிகேஷன் நடக்கும். அதாவது, உங்கள் மொபைலுக்கு வரும் OTP passwordஐ பதிவிட வேண்டும்.

* இதன்பின் உங்களது டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் வரும்.

* அதை நீங்கள் டவுன்லோடு செய்து சமர்ப்பித்துவிடலாம்.

LIC Jeevan Saakshya ஆப் ஆண்ட்ராய்ட் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். iPhone பயனர்களால் இந்த ஆப்பை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்