ஆப்நகரம்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ஹேப்பி நியூஸ்!

ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Sep 2021, 12:18 pm

ஹைலைட்ஸ்:

  • அமேசான் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
  • புதிதாக 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil amazon delivery employees
ஈ-காமர்ஸ் துறையில் சர்வதேச அளவில் அமேசான் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான புதிய ஊழியர்களை பணியமர்த்தப்போவதாக அண்மையில் அமேசான் அறிவித்தது. இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், கூடுதலாக சுமார் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக, அமெரிக்காவில் ஊழியர்களுக்கான சராசரி ஊதியத்தை ஒரு மணி நேரத்துக்கு 18 டாலருக்கு மேல் உயர்த்த அமேசான் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த மே மாதம் அமேசான் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், அமேசான் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் புதிதாக இணையும் டெலிவரி ஊழியர்களுக்கு 3000 டாலர் போனஸ் வழங்கி வருவதாக அமேசான் டெலிவரி சர்வீசஸ் துணைத் தலைவர் டேவ் போஸ்மன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்!
அமெரிக்க மார்க்கெட்டில் போட்டி கடுமையாகியுள்ளது. எனவே, ஊழியர்களுக்கான ஊதியத்தை அமேசான் உயர்த்தியுள்ளதாக டேவ் போஸ்மன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை போலவே இந்தியாவிலும் அமேசான் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்