ஆப்நகரம்

Amazon Layoff May 2023 : அமேசான் இந்தியாவில் 500 பேர் பணி நீக்கம்!

இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 16 May 2023, 1:09 pm
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாக வெளியேற்றி வருகின்றன. அதில் அமேசான் நிறுவனமும் ஒன்று. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பணி நீக்கத்தில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் சுமார் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil amazon layoffs


உலகின் மிகப்பெரிய ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், தொடர்ந்து தனது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் விளம்பரம், மனிதவள மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 9000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, மட்டுமே பீப்புள் எக்ஸ்பீரியன்ஸ் & டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் பிரிவில் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

3 மாதங்களில் 27,000 பேர் வெளியேற்றம்.. அமேசான் ஊழியர்கள் பரிதாபம்!
இந்நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணி நீக்கம் இன்னும் தொடரலான் எனவும் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டி ஜெஸ்ஸி இதுகுறித்து கூறுகையில், இது நிறுவனத்தின் நீண்ட கால நலனுக்காக எடுக்கப்பட்ட கடினமான முடிவு என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில்தான் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அமேசான் இதற்கு முன்னர் மொத்தம் 27,000 பேரைப் பணி நீக்கம் செய்திருந்தது. இதில் முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் 18,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 9,000 பேர் நீக்கப்பட்டனர். இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

பணி நீக்கத்தைத் தொடர்ந்து அதன் ஊழியர்களுக்கு அமேசான் நிறுவன தலைமைச் செயலதிகாரியான ஆண்டி ஜெசி கடிதம் அனுப்பினார். தங்களுடைய நிறுவனத்தின் நீண்ட கால நன்மைக்காகவே இந்த முடிவை எடுக்கப்பட்டதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனினும், ஊழியர்கள் மத்தியில் பணி நீக்கம் தொடர்பான பதற்றம் நீடிக்கிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்