ஆப்நகரம்

இந்தியாவில் மிகப்பெரிய சேகரிப்பு கூடத்தை திறந்த அமேசான்!

பிரபல ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசான், இந்தியாவில் மிகப்பெரிய சேகரிப்புக் கூடத்தை திறந்துள்ளது.

TNN 8 Sep 2017, 3:18 pm
ஐதராபாத்: பிரபல ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசான், இந்தியாவில் மிகப்பெரிய சேகரிப்புக் கூடத்தை திறந்துள்ளது.
Samayam Tamil amazon launches its largest warehouse in india
இந்தியாவில் மிகப்பெரிய சேகரிப்பு கூடத்தை திறந்த அமேசான்!


பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சேகரிப்பு கூடத்தை திறந்துள்ளது.

இந்த கூடம் ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே திறக்கப்பட்டுள்ளது. சுமார் 4,00,000 சதுர அடியில் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் 5வது சேகரிப்பு மையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த புதிய மையத்தை அடுத்து, அமேசான் நிறுவனத்தின் சேகரிக்கும் பகுதி 30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 41 சேகரிப்பு மையங்களை அமேசான் நிறுவியுள்ளது. அமேசான் இந்தியாவிற்கான வாடிக்கையாளர் சேவையின் உதவி தலைவர் அகில் சஷேனா கூறுகையில், புதிய கூடத்தின் மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த இயலும் என்றார்.

குறிப்பாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் வாடிக்கையாளர்கள் சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விற்பனையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தியாவில் விற்கும், வாங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதே தங்கள் நோக்கம் என்று சஷேனா தெரிவித்தார்.

Amazon launches its largest warehouse in India in Hyderabad.

அடுத்த செய்தி

டிரெண்டிங்