ஆப்நகரம்

இனி பால் வாங்குறது கஷ்டம்.. அதிரடியாக உயர்ந்த விலை!

பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2022, 2:43 pm
இந்தியாவில் இப்போது பெட்ரோல் - டீசல், சமையல் சிலிண்டர், காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் இதுபோன்ற செலவுகளுக்கு போதுமான அளவில் இல்லை என்று பொதுமக்கள் வருந்துகின்றனர். இதுபோன்ற சூழலில் தற்போது பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil milk price


பொதுமக்களின் தினசரி அத்தியாவசிய உணவுப் பொருளாக உள்ள பால் விலை உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. அமுல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமுல் பிராண்டில் பால் விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அகமதாபாத், சௌராஷ்டிரா, டெல்லி என்.சி.ஆர்., மேற்குவங்கம், மும்பை உள்ளிட்ட இடங்களிலும், அமுல் பிராண்டு பெயரில் பால் விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றத்தின்படி, அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் தாஸா உள்ளிட்ட பிராண்டு பொருட்களின் விலை உயருகிறது.

பால் விலையும் உயரப் போகுது! அமுல் அறிவிப்பு!
லிட்டருக்கு 2 ரூபாய் விலையேற்றம் என்பது சில்லறை விற்பனையில் MRP விலை லிட்டருக்கு 4 சதவீத உயர்வு எனவும், இது பணவீக்க சராசரியை விடக் குறைவுதான் எனவும் அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பால் விலை உயர்வு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும் பால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் சுமார் 80 சதவீத விலையை பால் விவசாயிகளுக்கு அமுல் நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்