ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த சம்பள உயர்வு.. விரைவில் அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது வீட்டு வாடகைப் படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 14 Apr 2024, 1:40 pm
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதற்கான அறிவிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil HRA hike


விதிமுறைப்பப்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகை படி (HRA) மற்றும் வேறு சில சலுகைகளில் மாற்றங்கள் இருக்கும். அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் மற்ற சலுகைகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் வீட்டு வாடகைப் படி குறித்து இதுவரை எந்த உத்தரவும் வெளியாகவில்லை.

தற்போதைய அகவிலைப்படி 50 சதவீதமாக இருப்பதால் HRA அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி அரசு ஊழியர்களின் மனதில் எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப் படியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நகர வகையின்படி மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடைகப் படியிக் மாற்றம் இருக்கும்.

நகரம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் வசிக்கும் இடம். HRA கணக்கிடுவதற்கு, சில காரணிகளின் அடிப்படையில் நகரங்கள் X, Y மற்றும் Z ஆகிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. 7ஆவது ஊதியக் குழுவின் படி, 2017ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் வீட்டு வாடகைப் படி X, Y மற்றும் Z நகரங்களுக்கு முறையே 24%, 16% மற்றும் 8% அடிப்படை ஊதியத்தில் வழங்கப்படுகிறது.

HRA கணக்கீடு:

அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டும்போது, X, Y மற்றும் Z நகரங்களில் HRA விகிதங்கள் முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% ஆக மாற்றப்படுகின்றன. எனவே, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.35,000 எனில், நகர்ப்புற வகையின்படி அவர் பெறும் அகவிலைப்படி எவ்வளவு என்று கீழே பார்க்கலாம்.

1.) X வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 ரூபாயில் 27% அதாவது ரூ. 9,450
2.) Y வகை நகரங்களுக்கு 35,000 ரூபாயில் 18% அதாவது ரூ. 6,300
3.) Z வகை நகரங்களுக்கு, 35,000 ரூபாயில் 9% அதாவது ரூ. 3,150 என்ற அளவில் இருக்கும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்