ஆப்நகரம்

உங்களுக்கு ரூ.25,000 சம்பளமா? அப்போ இதை பாருங்க!

இந்தியாவில் டாப் 10% பேர் 25,000 ரூபாய் சம்பளம் பெற்று வருவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 20 May 2022, 6:21 pm
நீங்கள் மாதம் 25,000 ரூபாய் அளவில் சம்பளம் வாங்கினால், இந்தியாவில் அதிக வருமானம் பெறும் டாப் 10% பேரில் நீங்களும் ஒருவர் என கூறுகிறது ஒரு ஆவறிக்கை.
Samayam Tamil cash


இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து இன்ஸ்டிடியூட் ஆஃப் காம்பெடிடிவ்னெஸ் நிறுவனம் 'State of Inequality in India' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களில் முதல் 10% பேர் மாதம் 25,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்த இந்தியர்களில் 3% பேர் மட்டுமே ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. முதல் 10% பேர் சராசரியாக மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். முதல் 10% பேரின் நிலைமையே இப்படியிருந்தால், கடைசியில் இருப்பவர்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலீடு செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதிங்க.. 6 நச் டிப்ஸ்!
வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்பட வேண்டும் எனவும், ஏற்றத்தாழ்வுகள் ஒரு எமோஷனலான விஷயம் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைக்க, வேலையில்லாதவர்களுக்கு அடிப்படை ஊதியத்தை மட்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களில் 41.59% பேர் சம்பளத்துக்கு வேலை செய்வோராக இருப்பதாகவும், 43.99% பேர் சுய தொழில் செய்து வருவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், பெண்களைக் காட்டிலும் அதிக ஆண்கள் வருமானம் ஈட்டுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்