ஆப்நகரம்

ஊரடங்கு போதும்... ஊர் சுற்ற விரும்பும் இந்தியர்கள்!

அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 60 சதவீத இந்தியர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2020, 5:05 pm
இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தால் மக்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே அடைந்து கிடந்தனர். பொதுவாக ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியர்கள் பலர் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளிநாடுகளுக்கும் சுற்றுலா பயணம் மேற்கொள்வர். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பக்கத்து தெருவுக்குக் கூட போக முடியாத சூழல் ஏற்பட்டது.
Samayam Tamil travel


இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்ந்து கொரோனா பீதியும் மக்களிடையே குறைந்துள்ளதால் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்லாவிட்டாலும் உள்நாட்டிலேயே குடும்பத்தோடு சென்று ரிலாக்ஸ் செய்யும் எண்ணத்தில் பலர் இருக்கின்றனர். இதுகுறித்து இண்டர்மைல் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான இந்தியர்கள் அடுத்த ஆறு மாதங்களில் சுற்றுப் பயணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ’கன்ஸ்யூமர் செண்டிமெண்ட் இண்டெக்ஸ்’என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 60 சதவீதத்தினர் உள்நாட்டிலேயே சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை உயர்வு கவலையா? புதிய திட்டத்தில் தனிஷ்க்!

ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 7,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான சுற்றுப் பயணத்துக்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை சுற்றுப் பயணம் எதுவும் மேற்கொள்ளப்போவதில்லை என்று 33 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அடுத்த ஆறு மாதங்களில் வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல விரும்புவதாகவும் 29 சதவீதத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தாங்களாகவே வாகனத்தை ஓட்டிக்கொண்டு நீண்ட தூரப் பயணம் செல்ல விரும்புவதாக 24 சதவீதத்தினர் இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்