ஆப்நகரம்

பிளிப்கார்ட் உடன் மோதி புண்ணாக்கிக் கொண்ட அமேசான்; 3 பில்லியன் டாலர் ஸ்வாகா!

அமேசான் கடந்த ஆண்டில் மட்டும் 3 பில்லியன் டாலரை இழந்துள்ளது.

Samayam Tamil 3 Feb 2018, 12:57 am
டெல்லி: அமேசான் கடந்த ஆண்டில் மட்டும் 3 பில்லியன் டாலரை இழந்துள்ளது.
Samayam Tamil as amazon battles flipkart its international losses swell to 3 bn in 2017
பிளிப்கார்ட் உடன் மோதி புண்ணாக்கிக் கொண்ட அமேசான்; 3 பில்லியன் டாலர் ஸ்வாகா!


இந்தியாவின் வர்த்தக் நிறுவனங்களில் பிளிப்கார்ட், அமேசான் முன்னணியில் உள்ளன. இதில் அமேசான் நிறுவனத்தின் வெளிநாட்டு வணிகம், கடந்த ஆண்டு 919 மில்லியன் டாலர் ஆகும்.

இது முந்தைய ஆண்டை விட இரட்டிப்பு மடங்கு. குறிப்பாக அமேசான் பிரைம் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்த 2016ல் பிரைம் சேவைக்கு ரூ.499 என்று விலை நிர்ணயித்து, 2017ல் ரூ.999க்கு மாறியது. கடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஜப்பானின் சாப்ட் பேங்க்கிடம் இருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு பெற்றது.

இதையடுத்து அமேசான் நிறுவனம் இந்தியா பிரிவுக்காக ரூ.8,150 கோடியை முதலீடு செய்தது.

இந்நிலையில் அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டு 1.28 பில்லியன் டாலராக இருந்த நட்டமானது, 2017ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதேசமயம் டிசம்பர் மாத காலாண்டில் சென்ற வருட விற்பனையான 43.9 பில்லியன் டாலரில் இருந்து அதிகரித்து, 54 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.

As Amazon battles Flipkart its international losses swell to $3 bn in 2017.

அடுத்த செய்தி

டிரெண்டிங்