ஆப்நகரம்

அசோக் லேலண்ட் வாகன டீலர்ஷிப்.. மதுரையில் மெகா தொடக்கம்!

இலகு ரக வர்த்தக வாகனங்களுக்காக மதுரையில்‌ புதிய அசோக்‌ லேலண்ட்‌ டீலர்ஷிப்‌ தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Mar 2023, 3:07 pm
இந்தியாவின்‌ முன்னணி வர்த்தக வாகன உற்பத்தியாளரான அசோக்‌ லேலண்ட் தனது இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான டீலர்ஷிப்பை மதுரையில்‌ தொடங்கிறது. இது தமிழகத்தில்‌ அதன்‌ 11வது இலகு ரக வர்த்தக வாகன விற்பனைக்கான டீலர்ஷிப்‌ மையமாகும்‌.
Samayam Tamil ashok leyland


திருப்பரங்குன்றம்‌ பிரதான சாலை, பசுமலையில் விற்பனை, சேவை, உதிரிபாகங்கள்‌ ஆகியவற்றைக் கொண்டு இயங்கும்‌ பாலாஜி டிரக்ஸ்‌ உடன்‌ இணைந்து செயல்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மிகச்‌ சிறந்த சேவை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்யும்‌ விதமாக இந்த மையத்தில்‌ மேம்பட்ட கருவிகள்‌, சக்கர சீரமைப்பு, வேகமான சேவை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. படா தோஸ், பார்ட்னர், மிடிஆர் போன்ற பல்வேறு ரகங்களில்‌ இலகு ரக வர்த்தக வாகனங்களை இந்த நிறுவனம்‌ உற்பத்தி செய்து
வருகிறது.

டீலர்ஷிப்‌ தொடக்க விழாவில்‌ அசோக்‌ லேலண்ட்‌ நிறுவனத்தின்‌ இலகு ரக வர்த்தக வாகனப்‌ பிரிவு தலைவர்‌ ரஜத்‌ குப்தா பேசுகையில்‌, "அசோக்‌ லேலண்ட்‌ நிறுவனத்துக்கு தமிழகம்‌ எப்போதும்‌ முக்கியமான சந்தையாக திகழ்ந்து வருகிறது. மதுரையில்‌ தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய டீலர்ஷிப்‌ மூலம்‌ மாநிலத்தில்‌ எங்களுடைய வர்த்தகம்‌ மேலும்‌ உறுதியானதாக மாறும்‌. தோஸ்த்‌ ரேஞ்ச்‌ மற்றும்‌ எங்களது சமீபத்திய தயாரிப்பான படா தோஸ்த்‌ ஆகியவற்றின்‌ வெற்றிக்கு வலுவான உற்பத்தியும்‌, பரவலான நெட்வொர்க்கும்‌ மிகவும்‌ முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. சிறப்பான மைலேஜ்‌, தரமான செயல்திறன்‌ மற்றும்‌ வலுவான விற்பனையும்‌ விற்பனைக்கு பிந்தைய சேவையின்‌ காரணமாக எங்களது அனைத்து தயாரிப்புகளும்‌ வாடிக்கையாளர்களிடம்‌ மிகச்‌ சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

35 எனப்படும்‌ விற்பனை, சேவை, உதிரி பாகங்கள்‌ ஆகிய மூன்று அம்சங்களையும்‌ கொண்ட எங்களது புதிய பங்குதார நிறுவனம்‌ பாலாஜி டிரக்ஸ்‌ எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதை உறுதி செய்துள்ளது. இப்பகுதியில்‌ உள்ள எங்கள்‌ வாடிக்கையாளர்களை நாங்கள்‌ இன்னும்‌ நெருக்கமாக அணுகுவதற்கு இது உதவும்‌. எங்களின்‌ வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த புதிய டீலர்ஷிப்‌ திறக்கப்படுகிறது. உலகின்‌ சிறந்த இலகு ரக வர்த்தத வாகன தயாரிக்கும்‌ முதன்மையான 10 நிறுவனங்களில்‌ ஒன்றாக திகழ வேண்டும்‌ என்ற எங்கள்‌ இல்ககை வேகமாக அடைவதற்கு இது உதவும்‌” என்றார்‌.

மிகவும்‌ மலிவான விலையில்‌ உலகத்தரம்‌ வாய்ந்த தொழில்‌ நுட்பத்தை வழங்குவதன்‌ மூலம்‌ இந்தியாவின்‌ இலகு ரக வர்த்தத வாகன வாடிக்கையாளர்களின்‌ வளர்ந்து வரும்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ எங்கள்‌ தயாரிப்புகள்‌ உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும்‌ 4 லட்சத்துக்கும்‌ மேலான இலகுரக வர்த்தக வாகனங்கள்‌ இயங்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்