ஆப்நகரம்

இந்தியாவுக்கு உதவும் சீன வங்கி: கொரோனாவை ஒழிக்க நிதி!

சீனாவைச் சேர்ந்த வங்கி ஒன்று இந்தியாவுக்கு 750 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Jun 2020, 5:45 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே மிகத் தீவிரமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரையில் 11,922 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.55 லட்சம் பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கவும், கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தவும் மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன. கொரோனா நிவாரணமாக நாட்டு மக்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அரசின் நிவாரணம் ஒன்றே பக்கபலமாக இருக்கிறது.
Samayam Tamil china bank


மறுபுறமோ மத்திய அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசுக்கு அதிகளவு நிதியுதவி தேவைப்படுகிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்தும் தொழில் துறையினர் தரப்பிலிருந்தும் கொரோனா நிவாரண நிதியுதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு நிதியுதவிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதன்படி, சீனாவைச் சேர்ந்த ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி இந்தியாவுக்குக் கடன் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு 750 பில்லியன் டாலர் நிதியை ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி வழங்குகிறது. முன்னதாக மே மாதத்தில் 500 மில்லியன் டாலர் கடனை இவ்வங்கி இந்தியாவுக்கு வழங்கியிருந்தது. இவ்வங்கி சார்பாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு 10 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரத்தை மையமாகக் கொண்டுள்ள இந்த வங்கியின் நிதியுதவியின் மூலமாக, கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் குடும்பங்களை மீட்டெடுக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்