ஆப்நகரம்

இன்று முதல் பென்சன் ரூல்ஸ் எல்லாம் மாறப்போகுது.. சீனியர் சிட்டிசன்கள் கவனத்திற்கு!!

அடல் பென்சன் யோஜனா திட்டத்திற்கான (Atal Pension Yojana) விதிமுறைகள் இன்று முதல் மாறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.

Samayam Tamil 1 Oct 2022, 12:47 pm
வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1, 2022 முதல் அடல் பென்ஷன் யோஜனா (APY) அல்லது அடல் பென்ஷன் திட்டத்தில் (APS) முதலீடு செய்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. அதாவது வரி செலுத்தும் குடிமகனாக இருக்கும் ஒரு சந்தாதாரர் இன்று முதல், APY க்கு விண்ணப்பிக்க முடியாது அதாவது, செப்டம்பர் 30 அதற்கான கடைசி தேதியாகும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil pension


APY (Atal Pension Yojana) திட்டத்தின் நன்மைகள் என்ன?

இந்தத் திட்டம் 60 வயதை எட்டும்போது சந்தாதாரருக்கு, மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரையிலான உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது.

சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு, சந்தாதாரரின் மனைவிக்கும் அதே ஓய்வூதியம் வழங்கப்படும், மேலும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரின் மறைவுக்குப் பிறகு, சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதியப் பணம் நாமினிக்கு திருப்பித் தரப்படும்.

APY கணக்கை திறப்பது எப்படி?

APY திட்டத்தில் சேர நினைக்கும் சந்தாதாரர்கள் வங்கி கிளை/அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்லலாம் அல்லது ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம். மேலும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு எண், ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்குவதன் மூலம் APY கணக்கை திறக்கலாம்.

APY திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்?

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் APY-ஐச் சந்தா பெறலாம் . மேலும் APY திட்டத்தின் கீழ் சேர குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1bee9gg&height=360&width=640

இத்திட்டத்தின் மூலம் என்னென்ன வரி விலக்குகளை பெற முடியும்:

APY சந்தாதாரர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD(1) இன் கீழ், அவர்கள் செய்த பங்களிப்புகளுக்கு வரி விலக்கு கோரலாம் . வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD (1) இன் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலக்கு என்பது மொத்த வருமானத்தில் 10 சதவீதமாகும், இது அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் கழிக்கப்படும். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் பங்களிப்பிற்கும் வருமான வரி விலக்கு அனுமதிக்கப்படும்.

இனி வரும் காலங்களில் இத்திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வருமான வரி விலக்கு பெற முடியும். புதிய சந்தாதாரகளுக்கான முழு அறிவிப்பும் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்