ஆப்நகரம்

எகிறும் விமான டிக்கெட் கட்டணம்.. வரலாறு காணாத உயர்வில் எரிபொருள் விலை!

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samayam Tamil 16 Jun 2022, 12:21 pm
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் (ATF) எரிபொருள் விலை அதிரடியாக 16% உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) முதல் ஏடிஎஃப் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
Samayam Tamil Indigo


கடந்த ஜூன் 1ஆம் தேதி ஏடிஎஃப் விலை 1.3% குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 16% விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏடிஎஃப் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் விலை 141232.87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று விலை உயர்வால் மட்டும் ஒரு கிலோ லிட்டருக்கு 19757.13 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவு!
இதன் விளைவாக விமான டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் 146,215.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு கிலோ லிட்டர் 140,092.74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஷெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான நிறுவனங்களுக்கு ஏடிஎஃப் விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்