ஆப்நகரம்

ATM: பணம் எடுத்தால் கட்டணம்... ஆனால் இந்த வங்கிகளில் இலவசம்!

மூன்று வங்கிகளில் மட்டும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

Samayam Tamil 13 Jun 2021, 6:05 pm
ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன்னர் அனுமதி அளித்தது. இதன்படி, அனுமதி அளிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் வாடிக்கையாளர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் வசூலிக்க வேண்டிய தொகை 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Samayam Tamil ATM


இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுத்தபின் ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கூடுதல் கட்டணமாக 21 ரூபாய் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், சில வங்கிகளில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஐடிபிஐ, இந்தஸ் இந்த், சிட்டி பேங்க் ஆகிய மூன்று தனியார் வங்கிகளில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

IDBI: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதே வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மற்ற வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். அதேநேரம், இந்தஸ் இந்த் வங்கி வாடிக்கையாளர்கள் எந்த வங்கி ஏடிஎம் மையத்திலும் இலவசமாகப் பணம் எடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்