ஆப்நகரம்

அதானி குழுமத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

அதானி குழுமத்திற்கு தடை விதிக்கப்படும்படி, ஆஸ்திரேலிய தொழில் நிறுவனம் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 19 Aug 2016, 6:16 pm
அதானி குழுமத்திற்கு தடை விதிக்கப்படும்படி, ஆஸ்திரேலிய தொழில் நிறுவனம் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil australian court rejects native title claim to adanis carmichael coal mine project
அதானி குழுமத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு


கவுதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், மிகப்பெரிய நிலக்கரி உற்பத்திச் சுரங்கம் ஒன்றை நிறுவும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, எஸ்பிஐ உள்பட பல்வேறு வங்கிகளில் இருந்து அந்நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் கார்மைக்கேல் என்ற இடத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் இருந்து, நிலக்கரி வெட்டியெடுத்து, சிறப்பு ரயில் பாதை மூலமாக, அதனை துறைமுகம் கொண்டுவந்து, அங்கிருந்து, இந்தியாவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல தடைகளை மீறி ரயில்பாதை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டிலேயே குறிப்பிட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் உற்பத்திப் பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயித்து, அதானி குழுமம் செயல்பட்டது. எனினும், அந்நாட்டு தொழில்நிறுவனங்கள், உள்ளூர் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, நிலக்கரி உற்பத்தி மேற்கொள்வதில், அதானி குழுமத்திற்கு தாமதம் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்த்தகக் குழுமம் ஒன்று, அதானி குழுமத்திற்கு தொழில் உரிமம் வழங்கப்பட்டதை எதிர்த்து, குயின்ஸ்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உள்நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இருக்கும்போது, இந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பது தேசவிரோதச் செயல் எனவும் அதில் கூறப்பட்டது.

இதனை தற்போது குயின்ஸ்லாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முறையான விதிமுறைகளுக்கு உள்பட்டே, அதானி குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பணிகளை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதானி குழுமத்திற்கு பிரகாசமாகி உள்ளது. விரைவில் நிலக்கரி உற்பத்தியை தொடங்கும் வகையில், பணிகளை தீவிரப்படுத்தப் போவதாகவும் அக்குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்