ஆப்நகரம்

சிக்கலில் கூகுள்.. 430 மில்லியன் டாலர் அபராதம்.. காரணம் இதுதான்!!

கூகுள் நிறுவனம் அதன் பயனர்களைத் தவறாக வழிநடத்தியதற்காக 43 மில்லியன் டாலர்கள் அபராதம் வழங்க என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 3:01 pm
ஆஸ்திரேலியாவின் போட்டி கண்காணிப்புக் குழு இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆல்ஃபபெட் இன்ஸ் (Alphabet Inc) எனும் கூகுள் யூனிட்டைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவைச் சேகரிப்பதற்காகப் பயனர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Google CEO.


அதனை அடுத்து இக்காரணத்திற்காக ஆல்ஃபபெட் இன்ஸ் நிறுவனம் 60 மில்லியன் டாலர் (42.7 மில்லியன்) அபராதம் செலுத்த அந்நாட்டின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2017 மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில் சில வாடிக்கையாளர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட இருப்பிடத் தரவைப் பற்றி கூகுள் தவறாக வழிநடத்தியதை ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

மேலும் பயனர்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் "இருப்பிட வரலாறு" அமைப்பது மட்டுமே இருப்பிடத் தரவைச் சேகரிக்கும் ஒரே வழி என்று பயனர்களை Google தவறாக நம்புகிறது, ஆனால் கூகுள் இணையப் பயன்பாடுகளை வைத்தும் பயனர்களின் தகவல்களை சேகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ( ACCC) தெரிவித்துள்ளது.

ஆனால் கூகுள் நிறுவனம் இப்பிரச்சனைகளை 2018 ஆம் ஆண்டே சரிசெய்து விட்டதாகக் கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்