ஆப்நகரம்

மாதம் ரூ.1 கோடி வருமானம்.. 11 வயதில் ரிட்டயர்மெண்ட்.. யார் இந்த சிறுமி?

மாதம் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் சம்பாதித்துவிட்டு 11 வயதி பணி ஓய்வுபெறும் சிறுமி பிக்ஸி கர்டிஸ்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Feb 2023, 3:09 pm
பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பை முடித்து, நல்ல வேலை பெற்று, சம்பள உயர்வு, பதவி ஊயர்வு, பணி ஓய்வுபெறுவது பற்றி எல்லாம் இளைஞர்கள் சிந்தித்து வரும் நிலையில், 11 வயதிலேயே மாதம் 1.1 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டிய சிறுமி தற்போது பணி ஓய்வுபெறுவது பற்றி சிந்தித்து வருகிறாராம்.
Samayam Tamil pixie curtis
pixie curtis - பிக்ஸி கர்டிஸ்


ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ (Roxy Jacenko). இவரது மகள் பிக்ஸி கர்டிஸ் (Pixie Curtis) அவர்களுக்கு தற்போது 11 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் மாதம் 2 லட்சம் டாலர் வருமானம் சம்பாதிக்கிறாராம் பிக்ஸி. 2 லட்சம் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்.

இந்த சூழலில், தொழிலில் இருந்து பணி ஓய்வு பெற்று தனது படிப்பில் கவனம் செலுத்தலாம் எனவும் தனது குடும்பத்துடன் பேசி முடிவு எடுத்திருக்கிறார் பிக்ஸி கர்டிஸ். கடந்த சில ஆண்டுகளிலேயே பிக்ஸி கர்டிஸ் இவ்வளவு வருமானம் ஈட்டும் அளவுக்கு தொழிலை எப்படி வளர்த்தார்?

பிக்ஸி கர்டிஸ் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆன்லைனில் தனது தொழிலை தொடங்கினார். அதாவது, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஆன்லைனிலேயே விற்பனை செய்து வந்துள்ளார் பிக்ஸி கர்டிஸ். சில மாதங்களிலேயே அவரது பிராண்டு நல்ல வளர்ச்சியை பெற்றுவிட்டது.

மேலும், ஆஸ்திரேலிய சிறுவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பிக்ஸி கர்டிஸின் பிராண்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தாமாகவே ஆன்லைனில் தொழில் செய்து பெரியளவில் வருமானம் ஈட்டியுள்ள பிக்ஸி கர்டிஸின் தொழில் திறமை தனக்கு பெருமை அளிப்பதாக அவரது தாயார் ராக்ஸி கூறுகிறார்.

இந்த சூழலில் தொழிலில் இருந்து பணி ஓய்வுபெற்றுவிட்டு மேற்படிப்பில் கவனம் செலுத்த பிக்ஸி கர்டிஸ் முடிவு செய்திருக்கிறார். இது குறித்து கடந்த சில மாதங்களாகவே பிக்ஸி கர்டிஸ் அவரது குடும்பத்தினருடம் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.

பிக்ஸி கர்டிஸ் தனது தொழில் மூலம் மாதம் 2 லட்சம் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் அவரிடம் சொந்தமாக ஒரு மெர்சிடிச்ஸ் பென்ஸ் GL காரும் இருக்கிறது. அவரது 11ஆவது பிறந்தநாள் பார்டிக்கு சுமார் 40,000 டாலர் செலவு செய்திருக்கிறார் பிக்ஸி. 40,000 டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்