ஆப்நகரம்

கொரோனாவிலிருந்து தப்பித்த கார் நிறுவனங்கள்!

ஜூன் மாதத்தில் வாகன விற்பனை அதிகரித்ததால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளன.

Samayam Tamil 7 Jul 2020, 4:13 pm
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. வேலை இல்லாமல் இருந்தால் அனைவரும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் நகை, கார் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை குறைந்தது.
Samayam Tamil car sales


ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில், வாகன விற்பனை ஏப்ரல் மாதம் முதலே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒரு மாதத்தில் ஒரு காரைக் கூட விற்பனை செய்ய முடியாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவித்தன. மாருதி சுஸுகி உள்ளிட்ட மிகப் பெரிய நிறுவனங்கள் கூட வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடிக்கு உள்ளாகின. இதுபோன்ற சூழலில் மூன்ற மாத வீழ்ச்சிக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வாகன விற்பனை மீண்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெரும்பாலானோர் வேலைக்குத் திரும்பியதால் வாகன விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜூம் செயலியை தூக்கி எறிந்த வர்த்தகர்கள் சங்கம்!

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஜூன் மாதத்தில் மொத்தம் 51,274 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் ஜூன் மாத விற்பனையை விடக் குறைவுதான் என்றாலும் மே மாத விற்பனையை விட சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 13,865 வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஹூண்டாய் நிறுவனம் 49 சதவீத வீழ்ச்சியுடன் மொத்தம் 21,320 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. மே மாதத்தில் இதன் வாகன விற்பனை எண்ணிக்கை 6,883 ஆக மட்டுமே இருந்தது.

Stock Market: என்ன இது சென்செக்ஸுக்கு வந்த சோதனை!

மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் 53 சதவீத வீழ்ச்சியுடன் ஜூன் மாதத்தில் மொத்தம் 18,5050 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மே மாத விற்பனை 9,076 ஆக இருந்தது. இந்திய ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், சிறிய வர்த்தக வாகனங்கள் பிரிவிலும், பயணிகள் வாகனங்கள் பிரிவிலும் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான விஜய் நேக்ரா கூறியுள்ளார்.

டொயோடா உள்ளிட்ட இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஜூன் மாதத்தில் தங்களது விற்பனையை மேம்படுத்தியுள்ளன. புதிய வாகனங்களுக்கான முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு முழுவதும் நீக்கப்பட்டவுடன் வாகன விற்பனை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று ஆட்டோமொபைல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்