ஆப்நகரம்

Bank holidays 2018: வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை, ஏடிஎம்மில் பணம் இருக்கா?

வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம்-களில் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படலாம்.

Samayam Tamil 18 Oct 2018, 11:48 am
வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால், இடர்பாட்டை தவிர்க்க முன்னரே திட்டமிட்டு செலவுக்கான பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Samayam Tamil வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை


நவராத்திரி பூஜையை முன்னிட்டு இன்று முதல் வரும் நான்கு நாட்களுக்கு அதாவது நவமி வரும் வியாழக்கிழமை, தசமி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் தேசிய அளவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில்தான் மற்ற அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விடுமுறை என்பதால், அவர்களது வங்கி சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ள இருப்பார்கள். ஆனால், வங்கி விடுமுறை என்பதால், இவர்களால் இந்தப் பணிகளை முடித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், ஏடிஎம்-களில் பணம் நிரப்புவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். விடுமுறை என்பதால், வெளியூர் சென்று இருப்பவர்கள் மற்றும் பூஜை காலங்களில் மக்களுக்கு அதிகளவில் பணம் தேவைப்படும்.

இந்த இடர்பாட்டை தவிர்க்க முன்னரே திட்டமிட்டு செலவுக்கான பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வேறுபடும். ஆதலால் உங்களது வங்கி செயல்பாடு குறித்து விசாரித்துக் கொள்ளவும். இடர்பாடுகளைத் தவிர்க்க மக்கள் தங்களது மணி வேல்ட்ஸ் மற்றும் கிரட்டி, டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். பெரிய அளவிலான பணத்தை ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்