ஆப்நகரம்

வங்கிகள் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வங்கிக் கணக்கு எண் மாறுமா? புதிய ஏடிஎம் வாங்க வேண்டுமா?

Samayam Tamil 22 Dec 2020, 5:06 pm
தேனா வங்கி, விஜயா வங்கி இணைக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்த கேள்விகளுக்கு பேங்க் ஆஃப் பரோடா விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil bank of baroda merged with vijaya bank and dena bank what next to the customers
வங்கிகள் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


மூன்று வங்கிகள் இணைப்பு!

வங்கித் துறையில் நிலவும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், விஜயா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க 2019 ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பணியில் தற்போது விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றின் 3,898 வங்கிக் கிளைகளையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தன்னுடன் இணைத்துள்ளது. இனி வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் 8,248 வங்கிக் கிளைகள் மற்றும் 10,318 ஏடிஎம்களிலும் சேவை பெறலாம் என்று பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது.

அக்கவுண்ட் நம்பர் மாறுமா?

மூன்று வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றின் வாடிக்கையாளர்களிடம் உள்ள மிகப் பெரிய கேள்வியே அவர்களின் வங்கிக் கணக்கு எண் மாறுமா என்பதுதான். வங்கிக் கிளையின் டேட்டா மாற்றத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கிளை மாறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு வங்கி தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்குத் தகவல் வரும். வங்கிக் கணக்கு எண் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் அடையாள எண்ணும் மாற்றப்படும்.

புதிய வங்கிக் கிளை!

தேனா பேங்க் மற்றும் விஜயா பேங்க் வங்கிக் கிளைகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளாக மாற்றப்படும். அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் கோடு நம்பரும் மாறும். வங்கிக் கிளை பெயரும் முகவரியும் மாறும். இதுவரையில் மாற்றப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், முழு விவரம் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் எனவும் அவ்வங்கி கூறியுள்ளது.

ஏடிஎம் கார்டு!

தேனா பேங்க் மற்றும் விஜயா பேங்க் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே உள்ள தங்களது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டுகள் எக்பைரி ஆகும்வரை பயன்படுத்திக்கொள்ளலாம். எக்ஸ்பைரி ஆகும் வரை ஏடிஎம் பின் நம்பரும் அதே நம்பர்தான். ஐஎஃப்எஸ்சி மற்றும் எம் ஐ சி ஆர் கோடு நம்பர்களும் மாறும் என்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி கூறியுள்ளது. அதேபோல, மூன்று வங்கிகளின் நெட் பேங்கிங் சேவைகளும் இனி https://www.bobibanking.com என்ற முகவரியில் மட்டுமே கிடைக்கும். அதேபோல, மொபைல் பேங்கிங் சேவைகள் M-Connect Plus என்ற மொபைல் ஆப் மூலமாகவே கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்