ஆப்நகரம்

Bank strike: இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது!

ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு தினங்களில் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 1:24 pm
வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாகவே ஊதிய உயர்வை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளையும் வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்து தலைமைத் தொழிலாளர் ஆணையத்திடம் வங்கி ஊழியர்கள் யூனியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Bank strike: இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது!


இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தலைமை தொழிலாளர் ஆணையத்திடம் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அது தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். அனைத்திந்திய வங்கிகள் கூட்டமைப்பு இப்போராட்டத்தைத் தணிக்க முயன்றது. ஆனால், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை: அட நம்புங்கப்பா... இன்னைக்கும் விலை குறைஞ்சிருக்கு!

2017ஆம் ஆண்டு முதலே வங்கி ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் மேற்கொள்ளப்படாமலேயே இருக்கிறது. இதற்கான எந்தவொரு உத்தரவாதத்தையும் அனைத்திந்திய வங்கிகள் கூட்டமைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு வங்கிச் சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. மற்ற வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்த தகவலை அனுப்பியுள்ளன.

பிப்ரவரி 1ஆம் தேதி 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் அதே நாளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்