ஆப்நகரம்

சிறு வியாபாரிகளுக்கு அடடே வசதிகள்.. இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்!

சிறு வியாபாரிகளுக்கு பல்வேறு வசதிகள் அடங்கிய ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப்பை எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 5:53 pm
தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) சிறு வியாபாரிகளுக்காக ஸ்மார்ட்ஹப் வியாபார் (SmartHub Vyapar) என்ற புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு தேவையான 25க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன.
Samayam Tamil HDFC Bank SmartHub Vyapar


இந்த ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப்பில் வியாபாரிகல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், உடனடி தொழில் கடன்கள் பெறுவதற்கான வசதிகளும் இந்த ஆப்பில் உள்ளது. மோசடி கும்பல்களிடம் இருந்து வியாபாரிகளின் தகவல்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

சீனியர் சிட்டிசன்களுக்கு பொற்காலம்.. சிறப்பு திட்டம் மேலும் நீட்டிப்பு!
ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப் வசதிகள்:

  • வியாபாரிகள் ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப் வாயிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Tap N Pay, QR Code, SMS Pay ஆகிய அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகளும் இந்த ஆப்பில் உள்ளது. Tap N Pay என்பது NFC வசதி கொண்ட மொபைல், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் இருந்து பணத்தை பெறுவதாகும்.

  • ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப் வாயிலாகவே வியாபாரிகள் உடனடி தொழில் கடன்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

  • அனைத்து பரிவர்த்தனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களையும் தொகுத்து இந்த ஆப் தருகிறது.

  • எச்டிஎஃப்சி டிஜிட்டல் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப்பில் இணைந்துகொள்ளலாம்.

  • இதுபோக, ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப்பில் EVA சாட்போட் வசதி உள்ளது. இந்த சாட்போட் வாயிலாக வியாபாரிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம், குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.

  • இதுபோக, ஸ்மார்ட்ஹப் வியாபார் ஆப்பில் வர்த்தக கிரெடிட் கார்டு வசதி உள்ளது. இதன் வாயிலாக தொழில் செலவுகளை சமாளித்துக்கொள்ளலாம். மேலும், உங்களின் விநியோகர்களுக்கும் எளிதாக பணம் செலுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்