ஆப்நகரம்

வட்டியே இல்லாமல் வீட்டுக் கடன் கொடுக்குறாங்களா? என்னய்யா சொல்றிங்க?

வட்டியே இல்லாமல் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறதாம். அதைப் பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 10 Jan 2021, 5:30 pm
வீடு வாங்கவோ, கட்டவோ திட்டமிட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி சொத்து ரெடி பண்ணுவதே அதிகம். இந்தியாவை பொறுத்தவரை, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுவதே புத்திசாலித்தனம். வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான சலுகைகளை வழங்குகின்றன.
Samayam Tamil Home-loan


வட்டி தள்ளுபடி, பிராசஸிங் கட்டணம் சலுகை, பண்டிகைக் கால சலுகைகள் என வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆஃபர்களை வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் கடன் வாங்கும் முன் குறைந்த வட்டிக்கு எங்கு கடன் கிடைக்கிறது என ஆராய்ந்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

கம்மி விலையில் தங்கம் வாங்கி அதிக லாபம் பெறும் ரகசியம்!
இதுபோக, கடன் தொகை, சிபில் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதமும் மாறுபடுகிறது. நம்மூரில் நிலைமை இப்படியிருக்க, டென்மார்க் நாட்டில் வட்டியே இல்லாமல் வீட்டுக் கடன் கொடுக்கிறார்களாம். மத்திய வங்கி விகிதங்கள் நெகடிவ்வாக இருக்கும் நீண்ட வரலாறு டென்மார்க் நாட்டுக்கு உண்டு.

உலகளவில் மற்ற நாடுகளை காட்டிலும் டென்மார்க்கில் மத்திய வங்கி விகிதங்கள் மிக மிக குறைவு. 20 ஆண்டு வீட்டுக் கடனை வட்டியே இல்லாமல் வழங்கினால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? 2012ஆம் ஆண்டுக்கு பிறகு டென்மார்க்கில் மத்திய வங்கி விகிதங்கள் 0%-க்கும் கீழே இறங்கியது.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்... உங்கள் பணத்துக்கு ஆபத்து!
இதனால் டென்மார்க் மக்கள் வட்டியே இல்லாமல் வீட்டுக் கடன் வாங்கி பயனடைந்தார்கள். உலகம் முழுக்க இருக்கும் அனைத்து மத்திய வங்கிகளும் வட்டியை உயர்த்த பயப்படுகின்றனர்.

2021ஆம் ஆண்டில் எந்தவொரு மத்திய வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்தப்போவதில்லை என புளூம்பர்க் ரிப்போர்ட் கூறுகிறது. டென்மார்க்கில் கிடைக்கும் வட்டியில்லா வீட்டுக் கடன்கள் மற்ற நாட்டு மக்களையும், முதலீட்டாளர்களையும் பொறாமை கொள்ளச் செய்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்